ஞாயிறு, 15 ஜூலை, 2012

தமுமுகவின் முன்னால் மாவட்ட தலைவர் சகோ. சலீமுல்லா கான் அவர்கள் TNTJ வில் இணைந்தார்

கண்ணியமும் பாக்கியமும் பொருந்திய அல்லாஹ் சுப்ஹானஹீத்தாலாவின் திருப்பெயரால்....

தமுமுகவின் முன்னால் இராமநாதபுரம் மாவட்டத் தலைவராக இருந்த சகோதரர் சலீமுல்லா கான் அவர்கள் தமது ஆதரவாளர்களுடன் நேற்று TNTJ மாநிலச் செயலாளர்கள் சகோதரர் யூசுப் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் முன்னிலையில் இணைந்தார்.

இது பற்றிய மாவட்ட நிர்வாகத்தில் இருந்து வரும் செய்தி, கடந்த சில நாட்களாகவே இந்த முடிவு குறித்து அவர் மாநிலத் தலைவர் சகோதரர்  பீஜே அவர்களிடம் நேரடியாகப் பேசியதாகவும், தமுமுக வினருக்குக் கூட இது பற்றி அவர் தெரிவித்ததாகவும் தெறிகிறது.

கடந்த 3 நாட்களுக்கு முன் அவர் வகித்து வந்த மமகவின் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக அறிவிப்பும் செய்துள்ளனர் மமக நிர்வாகிகள்.


எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தம் அவன் நாடியோருக்கு நேர்வழிகாட்டுகிறான்.

சனி, 23 ஜூன், 2012

இராமநாதபுரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் - துபாய்

இராமநாதபுரம் மாவட்ட துபாய் மற்றும் ஷார்ஜா மண்டலங்களின்  ஆலோசனைகூட்டம் 22/06/2012 அன்று துபாய் ஹோர் அல் அன்ஸ் மர்கஸில் வைத்து துபாய் மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் சகோதரர் அஸ்ரப் அலி அவர்கள் முன்னிலையில் இராமநாதபுரம் மாவட்ட பொருப்பாளர் தலமையில் நடைபெற்றது. அதில் நிர்வாக சீரமைப்பு, மாவட்ட நிர்வாக மாற்றம் சம்மந்தமான பிரச்சனைகள் மற்றும் மாவட்ட தாயிக்கான சம்பளம் ஆகியவற்றை விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.








அல்ஹம்துலில்லாஹ்

சனி, 18 பிப்ரவரி, 2012

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இராமனாதபுரம் மாவட்ட துபாய் மற்றும் ஷார்ஜா ஒருகிணைத்த கூட்டம் 17 /02 /2012 அன்று வெள்ளிகிழமை அசர் தொழுகைக்கு பிறகு துபாய் மண்டல மக்கள் தொடர்புச் செயலாளர் சகோதரர் அஸ்ரப் நூஹு அவர்கள் தலைமையில் ஹோர் அல் அன்ஸ் மர்கசில் நடைபெற்றது




இதில் விவாதிக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு

1. கடந்த ஜனவரி மாவட்ட செயல்பாடுகள் வாசிக்கப்பட்டது
2. பிப் 14 மாவட்ட செயல்பாடுகள் மற்றும் மக்கள் திரளாக களந்து கொண்டது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது மேலும் மாவட்டத்தில் பிப் 14 போராட்டத்திற்காக வந்த வரவு மற்றும் செலவுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. 
3. சந்தாக்களை முறையாக வசூலிக்க சகோதரர் ஹபீப் அவர்களை பொருப்பாளராக நியமிப்பது என தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
4. எதிர்கால திட்டமாக மாவட்ட வேண்டுகோளுக்கினங்க இன்னும் 6 மாதத்திற்கு தொடர்ந்து மாவட்ட தாயிக்கான சம்பளத்தை அனுப்பவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள தீர்மாணிக்கப்பட்டுள்ளது 

அல்ஹம்துலில்லாஹ்........

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

இராமநாதபுரத்தை உளுக்கிய பிப் 14 தவ்ஹீத் ஜமாஅத் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இடஒதுக்கீட்டுப் போரட்டம் இராநாதபுரத்தையே உளுக்கியது....

மத்திய மாநில அரசுகள் முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்ற இப் போரட்டத்தில் ஏராளமான ஆண்களும் பெண்களும் எழுச்சியுடன் கலந்துகொண்டனர். சகோதரர் மேலாண்மைக் குழு உறுப்பினர் அப்துந் நாசர் அவர்கள் எழுச்சியுரை நிகழ்த்தினார்கள்.

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் இந்தப் போரட்டம் வெற்றியடைய பிரார்திக்குமாறு கோட்டுக்கொள்கிறோம்.



வெள்ளி, 30 டிசம்பர், 2011

துபாய் மற்றும் ஷார்ஜா மண்டலக் கூட்டம் 30-12-2011

ஏக இறையோனின் திருப்பெயரால்...

இராமநாதபுரம் மாவட்ட துபாய் மற்றும் ஷார்ஜா மண்டலங்களின் ஒருங்கிணைந்த கூட்டம் இன்று 30-12-2011 வெள்ளி கிழமை மாலை 4:45 மணியளவில் ஷார்ஜா மர்கஸில் மண்டலத் தலைவர் சகோதரர் இருமேனி ஹனிபா அவர்கள் தலைமையில் துவங்கியது. இதில் ஏராளமான இராமநாதபுரம் மாவட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

முதலில் மாவட்ட ஒருங்கிணைப்பின் அவசியம் குறித்து சகோதரர் அப்துல் ஹலீம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அதை தொடர்ந்து மாவட்ட மற்றும் மண்டல கூட்டமைப்பின் மூலம் நாம் செய்துவரும் பணிகள் குறித்து சகோதரர் இராமேஸ்வரம் முஹைதீன் அவர்கள் எடுத்துரைத்தார்கள். 

மாவட்டத்தின் புதிய நிர்வாகம் எடுத்து பிறகு மண்டலத்திற்கு அனுப்பட்ட கடிதங்கள் வாசிக்கப்பட்டது. அதில் மாவட்தின் செய்திட்டங்கள் மற்றும் தற்போது மாவட்டத்தின் தேவை குறித்த விளக்கங்கள் இடம் பெற்றன. அதன் அடிப்படையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 




தீர்மானங்களாக. 
1. மவாட்ட தேவைக்கான சந்தா முறையை வருடத்திற்கு 200 என நிர்ணயித்து அதை ஜனவரி 2012 முதல் நடைமுறைப்படுத்த தீர்மாணிக்கப்பட்டது. 
2. மாற்று மத நண்பர்களுக்கான தாவா பணியை விரிவு படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டு முதலில் 20 செட் (குர்ஆன், புத்தகங்கள் மற்றும் CD க்கள் அடங்கிய) துபாய் மற்றும் ஷார்ஜா மண்டலத்தின் சார்பில் அனுப்பி வைப்பது என தீர்மாணிக்கப்பட்டு வந்திருந்த மக்களே அதற்கு பொருப்பேற்றுக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்....
3. அடுத்த மண்டலக் கூட்டத்தை வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் நாள் துபாய் ஹோர் அல் அன்ஸ் மர்கஸில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது. 

வெள்ளி, 25 நவம்பர், 2011

ஷார்ஜா ஒருங்கிணைப்புக் கூட்டம் 25-11-2011

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அமீரகத்தில் துபாய் மற்றும் அபுதாபியில் இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டு மாவட்ட கொள்கை சகோதரர்கள் ஓரளவுக்கு ஒருங்கிணைக்கப்பட்டு பல பணிகளை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு முயற்சியாக கடந்த மாதம் நடத்தப்பட்ட நிர்வாகக் கூட்டத்தில் ஷார்ஜா மண்டல ஒருங்கிணைப்பு கூட்டத்தை இன்று நடத்த தீர்மாணிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று ஷார்ஜா மர்கஸின் இன்று மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் ஷார்ஜா மண்டலத் தலைவர் சகேதரர் இருமேனி ஹனிபா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. துபாய் மற்றும் ஷார்ஜா மண்டலத்தை சேர்ந்த பல சகோதரர்கள் கலந்துகொண்டனர். அதில் மூன்று பொருப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1. சகோதரர் சேக் தாவூது - பனைக்குளம் - 050 3600358
2. சகோதரர் சலாகுதீன் - தேவிபட்டினம் - 050 7563047
3. சகோதரர் இப்றாகீம் (EMCO - industrial area) - பெரியபட்டிணம் - 056 6801291


மேலும் துபாய் மற்றும் ஷார்ஜா மண்டலங்களுக்கான நிர்வாகக் கூட்டத்தை வரும் 1-1-2012 அன்று ஷார்ஜாவில் வைத்து நடத்துவது என தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

சனி, 26 மார்ச், 2011



அல்லாஹ்வின் திருப்பெயரால்..

25-03-2011

அன்பார்ந்த சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்று மாலை சரியாக 5.15 மணியளவில் TNTJ இராமநாதபுரம் மாவட்ட துபை மண்டல உறுப்பினர்கள் கூட்டம் துபை JT மர்கஸில் நடைபெற்றது. அதில் இராமநாதபுரம் மாவட்ட துபை மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் கொள்கை சகோதரர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதில் தீர்மானிக்கப்பட்ட விபரங்கள் வருமாறு....



1. மாவட்ட வளர்ச்சி மற்றும் நிர்வாக அமைப்பு குறித்தும், தாவா மற்றும் செயல்பாடுகளை அதிகப்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

2. மாவட்ட தலைமையிலிருந்து வந்த கடிதம் வாசிக்ப்பபட்டது. மாவட்ட புதிய மர்கஸ் வாங்கியது தொடர்பான 560,000.00 கடனுக்காக துபாயிலிருந்து தேவையான பங்களிப்புச் செய்வது எனவும் அதற்காக சிலரை தனிப்பட்ட முறையில் சந்திப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

3. உறுப்பினர் சந்தாக்களை வசூல் செய்ய துபாயில் உள்ள கிளைவாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது அதன் படி

சோனாப்பூர் - சகோதரர் புஹாரி (சக்கரக்கோட்டை) அவர்களும்
சத்வா - சகோதரர் சம்சுதீன் (ராம்நாட்) அவர்களும்
அல்குஸ் - சகோதரர் ரியாஸ் (அத்தியுத்து) அவர்களும்
ஹோர் அல் அன்ஸ் - சகோதரர் ருக்னுதீன் (வழுதூர்) அவர்களும்
தேரா - சகோதரர் நிஸார்கான் (புதுவலசை) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

4. மாவட்ட தலைமைக்கு புதிதாக ஒரு தாயியை அமர்த்துவது சம்மந்தமாகவும் அந்த தாயியின் சம்பளத்திற்காக மாதம் ரூபாய் 6000 துபை மண்டலம் சார்பாக அனுப்பிவைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.