வெள்ளி, 30 டிசம்பர், 2011

துபாய் மற்றும் ஷார்ஜா மண்டலக் கூட்டம் 30-12-2011

ஏக இறையோனின் திருப்பெயரால்...

இராமநாதபுரம் மாவட்ட துபாய் மற்றும் ஷார்ஜா மண்டலங்களின் ஒருங்கிணைந்த கூட்டம் இன்று 30-12-2011 வெள்ளி கிழமை மாலை 4:45 மணியளவில் ஷார்ஜா மர்கஸில் மண்டலத் தலைவர் சகோதரர் இருமேனி ஹனிபா அவர்கள் தலைமையில் துவங்கியது. இதில் ஏராளமான இராமநாதபுரம் மாவட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

முதலில் மாவட்ட ஒருங்கிணைப்பின் அவசியம் குறித்து சகோதரர் அப்துல் ஹலீம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அதை தொடர்ந்து மாவட்ட மற்றும் மண்டல கூட்டமைப்பின் மூலம் நாம் செய்துவரும் பணிகள் குறித்து சகோதரர் இராமேஸ்வரம் முஹைதீன் அவர்கள் எடுத்துரைத்தார்கள். 

மாவட்டத்தின் புதிய நிர்வாகம் எடுத்து பிறகு மண்டலத்திற்கு அனுப்பட்ட கடிதங்கள் வாசிக்கப்பட்டது. அதில் மாவட்தின் செய்திட்டங்கள் மற்றும் தற்போது மாவட்டத்தின் தேவை குறித்த விளக்கங்கள் இடம் பெற்றன. அதன் அடிப்படையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 




தீர்மானங்களாக. 
1. மவாட்ட தேவைக்கான சந்தா முறையை வருடத்திற்கு 200 என நிர்ணயித்து அதை ஜனவரி 2012 முதல் நடைமுறைப்படுத்த தீர்மாணிக்கப்பட்டது. 
2. மாற்று மத நண்பர்களுக்கான தாவா பணியை விரிவு படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டு முதலில் 20 செட் (குர்ஆன், புத்தகங்கள் மற்றும் CD க்கள் அடங்கிய) துபாய் மற்றும் ஷார்ஜா மண்டலத்தின் சார்பில் அனுப்பி வைப்பது என தீர்மாணிக்கப்பட்டு வந்திருந்த மக்களே அதற்கு பொருப்பேற்றுக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்....
3. அடுத்த மண்டலக் கூட்டத்தை வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் நாள் துபாய் ஹோர் அல் அன்ஸ் மர்கஸில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.