

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
25-03-2011
அன்பார்ந்த சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்று மாலை சரியாக 5.15 மணியளவில் TNTJ இராமநாதபுரம் மாவட்ட துபை மண்டல உறுப்பினர்கள் கூட்டம் துபை JT மர்கஸில் நடைபெற்றது. அதில் இராமநாதபுரம் மாவட்ட துபை மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் கொள்கை சகோதரர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதில் தீர்மானிக்கப்பட்ட விபரங்கள் வருமாறு....
1. மாவட்ட வளர்ச்சி மற்றும் நிர்வாக அமைப்பு குறித்தும், தாவா மற்றும் செயல்பாடுகளை அதிகப்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
2. மாவட்ட தலைமையிலிருந்து வந்த கடிதம் வாசிக்ப்பபட்டது. மாவட்ட புதிய மர்கஸ் வாங்கியது தொடர்பான 560,000.00 கடனுக்காக துபாயிலிருந்து தேவையான பங்களிப்புச் செய்வது எனவும் அதற்காக சிலரை தனிப்பட்ட முறையில் சந்திப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3. உறுப்பினர் சந்தாக்களை வசூல் செய்ய துபாயில் உள்ள கிளைவாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது அதன் படி
சோனாப்பூர் - சகோதரர் புஹாரி (சக்கரக்கோட்டை) அவர்களும்
சத்வா - சகோதரர் சம்சுதீன் (ராம்நாட்) அவர்களும்
அல்குஸ் - சகோதரர் ரியாஸ் (அத்தியுத்து) அவர்களும்
ஹோர் அல் அன்ஸ் - சகோதரர் ருக்னுதீன் (வழுதூர்) அவர்களும்
தேரா - சகோதரர் நிஸார்கான் (புதுவலசை) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
4. மாவட்ட தலைமைக்கு புதிதாக ஒரு தாயியை அமர்த்துவது சம்மந்தமாகவும் அந்த தாயியின் சம்பளத்திற்காக மாதம் ரூபாய் 6000 துபை மண்டலம் சார்பாக அனுப்பிவைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக